நான் பைத்தியக்காரியா? பிக் பாஸ் வீட்டில் ரியாலிட்டியே இல்லை – எல்லாமே பொய் : பிக் பாஸ் நந்தினி கடும் குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் குறுகிய காலமே பங்கேற்று வெளியேறிய போட்டியாளர் நந்தினி, தற்போது ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்குப் பிறகு, தனது மனநிலை, நிகழ்ச்சிக்குள் நடந்த அனுபவங்கள் மற்றும் நிகழ்ச்சி குழுவின் செயல்பாடுகள் குறித்து அவர் வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, “என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது, என்னிடம் ஸ்டஃப் இல்லை” என கூறி அழுது ஆர்பாட்டம் செய்த நந்தினியின் நடவடிக்கைகள், இணைவாசிகளையும் பார்வையாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதனைத் தொடர்ந்து, அவரது மனநிலை சரியில்லை என கூறப்பட்ட நிலையில், அவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், தனது பேட்டியில் நந்தினி கூறியதாவது,“பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளர் நந்தினி நான். என்னை எல்லாரும் மறந்திருப்பீர்கள். பிக் பாஸ் வீட்டில் நுழைந்த நான்கு நாட்களிலேயே அந்த வீட்டில் ரியாலிட்டியே இல்லை என்று உணர்ந்து வெளியே வந்தேன். இன்று அதை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது” என்றார்.

மேலும் அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தன்னுடைய கேரியரே பாதிக்கப்பட்டதாகவும்,“நீ பைத்தியக்காரி மாதிரி கத்திக்கிட்டே இருக்க, சண்டை போட்டுக்கிட்டே இருக்க” என்று வெளியே பலர் சொல்லுகிறார்கள். இதையெல்லாம் நாங்கள் செய்யவில்லை, எங்களை அப்படிச் செய்ய வைக்கிறார்கள். பைத்தியக்காரி நான் என்றால், பண்ண வைக்கிற அவங்களை என்ன சொல்லுவது?” என கேள்வி எழுப்பினார்.

“எனக்கு கவுன்சிலிங் தேவையில்லை. அவங்களுக்கு தான் கவுன்சிலிங் தேவை. நான் ஒரு தொகுப்பாளினி. எங்க போனாலும் ‘பிக் பாஸ் வீடியோ பார்த்தேன், நீங்க ஸ்டேபிளா இல்ல’ என்று சொல்கிறார்கள். பைத்தியக்காரி என்ற பட்டத்தை எனக்கு கட்டிவிட்டு வெளியில் அனுப்பிவிட்டார்கள். வெளியே வந்த பிறகும் எந்த ஒரு ரெஸ்பான்ஸும் எனக்கு கொடுக்கவில்லை” என வேதனையுடன் தெரிவித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நம்பகத்தன்மை குறித்தும் நந்தினி கடுமையாக விமர்சித்துள்ளார்.“ஷோவில் சாண்ட்ரா எப்போதும் அழுதுக்கிட்டே இருக்காங்க. பிரஜன் போகும்போது வெளியே போனாங்க. ரம்யா ஜோ, விஜய் சேதுபதி முன்னாடியே நான் வெளியில் போகிறேன் என்று சொன்னாங்க. அவங்களை ஏன் வெளியே அனுப்பவில்லை? யார் வெளியே போக வேண்டும் என்பதை எல்லாரும் சேர்ந்து டிஸ்கஸ் பண்ணித்தான் முடிவு செய்கிறார்கள். என்னை எந்த சதியோடு வெளியே அனுப்பினார்கள் என்பதை அவர்கள் சொல்ல வேண்டும்” என்றார்.

மேலும்,“இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை நினைத்து ரொம்பவே வருத்தப்படுகிறேன். நான் இதை பேசுவது பிரபலமாக வேண்டும் என்பதற்காக இல்லை. அந்த வீட்டில் பலர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இப்போது பார்வதிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியிருக்கிறார்கள். சண்டை நடக்கும்போதே பிக் பாஸ் தடுத்திருக்கலாமே. நிகழ்ச்சியை முழுக்க எடிட் செய்து தான் வெளியிடுகிறார்கள். அவர்கள் வெளியே தெரிய வேண்டும் என்று நினைப்பது மட்டுமே வெளியில் தெரிகிறது” என்று நந்தினி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

நந்தினியின் இந்த பேட்டி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் உள்ளக செயல்பாடுகள் குறித்த பல கேள்விகளை மீண்டும் எழுப்பி, சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதத்தை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Am I crazy There is no reality in the Bigg Boss house everything is a lie Bigg Boss Nandini makes a strong allegation


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->