திரைக்கு வருமா ‘ஜனநாயகன்’...? தணிக்கை சான்றிதழ் கோரி அவசர வழக்கு...!
Will Jananaayagan released theaters urgent case filed seeking censor certificate
சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’ போன்ற வெற்றிப் படங்களை தந்த இயக்குநர் எச். வினோத், இந்த முறை விஜயை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள படம் ‘ஜனநாயகன்’.
அரசியல்–சமூக பின்னணியில் உருவான இந்த படம், அனைத்து தொழில்நுட்ப பணிகளும் நிறைவடைந்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ நடித்துள்ளார். இவர்களுடன் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, கடந்த மாதமே தணிக்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில், இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள சூழலில், இந்த தாமதம் ரசிகர்களிடையே அதிருப்தி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரி, படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், நீதிபதி பிடி. ஆஷா முன்பு முறையீடு செய்தார்.
இதனை ஏற்று, இன்று மதியம் 2.30 மணிக்கு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.பொங்கல் வெளியீடு உறுதியாகுமா, அல்லது புதிய திருப்பம் ஏற்படுமா என்பதையே தற்போது திரையுலகமும் ரசிகர்களும் உற்றுநோக்கி வருகின்றனர்.
English Summary
Will Jananaayagan released theaters urgent case filed seeking censor certificate