இளையராஜாவுடன் சண்டை போட்ட பிறகும் அந்த அன்பு குறையவில்லை – மிஷ்கின் மனசுல இவ்வளவு சோகம் இருக்கா?மிஷ்கின் உருக்கம்!
Even after the fight with Ilayaraja that love did not diminish is there so much sadness in Mysskin heart Mysskin warmth
இயக்குநர், நடிகர் என பல்வேறு முகங்களில் ரசிகர்களை கவர்ந்து வரும் மிஷ்கின், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் செயல்பட்டு வருகிறார். இசை மீது அளவற்ற காதல் கொண்ட மிஷ்கின், குறிப்பாக இசைஞானி இளையராஜா பற்றிப் பேசும்போது ஒரு குழந்தை போல உணர்ச்சி வசப்படுவது பலமுறை பார்வையாளர்களால் கவனிக்கப்பட்டுள்ளது.
இளையராஜாவை அவர் எப்போதும் “அப்பா” என்றே அழைப்பார். தனது படங்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா என்றால், அவரது பெயரையே முதலில் இடம்பெறுமாறு போஸ்டர் வடிவமைப்பார். இவ்வளவு ஆழமான மரியாதையும் அன்பும் கொண்ட மிஷ்கினுக்கும், இளையராஜாவுக்கும் இடையே ஒருகட்டத்தில் மிகப்பெரிய சண்டை ஏற்பட்டது என்ற தகவலை, மிஷ்கினே சமீபத்தில் பகிர்ந்து கொண்டது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
சூப்பர் சிங்கர் மேடையில், இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் உடன் உரையாடும்போது, இளையராஜாவுடன் ஏற்பட்ட அந்த மனவருத்தம் குறித்து மிஷ்கின் வெளிப்படையாக பேசினார்.அவர் கூறுகையில்,“நான் இளையராஜா பற்றி அதிகமாக பேசுவதால் என்னை விமர்சிப்பதை பார்க்கிறேன். இப்போது உரிமையோடு ஒன்று சொல்கிறேன். இளையராஜா முகத்திலே கூட இனிமேல் முழிக்கக் கூடாது என்று சண்டை போட்டு வந்தவன் நான். அது நான் என் அப்பாவுடன் சண்டை போட்ட மாதிரி தான்” என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அவர்,“ஆனால் ஒரு இசைஞானிக்காக நான் என் வாழ்நாள் முழுக்க வேண்டிக் கொண்டே இருப்பேன். என் நாட்டில், என் வீட்டில், என் தாய் பெற்றெடுத்த அந்த மகா கலைஞன் – இறைவன் கொடுத்த அந்த பிச்சை எனக்கு மிகப்பெரிய பாக்கியம். அதனால்தான் நான் அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறேன். அவரைப் பற்றி பேசுவதால் என் ஆன்மா சுத்தமாகிறது” என உருக்கமாக பேசினார்.
மிஷ்கினின் இந்த உணர்ச்சிப்பூர்வமான பேச்சு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றது. குறிப்பாக, தோழர் ஆதி என்ற எக்ஸ் (ட்விட்டர்) பயனர்,“இனி பார்க்கவே கூடாதுனு சண்டை போட்டு பிரிஞ்சு வந்த பின்னாடி ஒருத்தரைப் பற்றி இவ்வளவு உள்ளப்பூர்வமாக, நெகிழ்ந்து, காதலோட பேச முடியுமா? அப்படியொரு கலைஞன் மிஷ்கின்… அது தான் ராஜா”என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு, பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
மிஷ்கின் – இளையராஜா உறவு, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதற்கும் மேலான மரியாதையும் இசை மீது கொண்ட பக்தியும் தான் என்ற உண்மையை இந்த நிகழ்வு மீண்டும் உணர்த்தியுள்ளது.
English Summary
Even after the fight with Ilayaraja that love did not diminish is there so much sadness in Mysskin heart Mysskin warmth