‘ஜன நாயகன்’ ரீமேக் சர்ச்சை: இயக்குநர்கள் சுயமாக சிந்திக்க வேண்டும்..பாக்கியராஜ் பேச்சை வைரலாக்கி ட்ரோல் செய்யும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்
Jana Nayagan remake controversy Directors should think for themselves Sivakarthikeyan fans troll Pakiyaraj speech by making it viral
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜன நாயகன்’ திரைப்படம், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்ற சர்ச்சை தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இயக்குநர் பாக்கியராஜ் பேசிய ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.“அடுத்தவன் சட்டையை ஆல்ட்ரேஷன் பண்ணி போட்டால் அது புதுசா தெரியாது” என்ற அவரது கருத்தை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து, ‘ஜன நாயகன்’ படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற ‘வீதி தரும் வெண் திரை விருது விழா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பாக்கியராஜ், தமிழ் சினிமாவில் புதுமையான படைப்புகள் வர வேண்டிய அவசியம் குறித்து பேசினார்.அவர் பேசும்போது,“புதிய கருத்துகளையும், புதிய கதைகளையும் படமாக எடுக்கும் போது பல சிக்கல்கள் வரும். ஆனால் அதற்காக பயந்து பின்னடைவதற்குப் பதிலாக தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்” என்று இயக்குநர்களுக்கு ஊக்கம் அளித்தார்.
இதற்கு முன், கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படம் தாலி சென்டிமென்ட்டுக்கு எதிரானதாக வந்தபோது, அதனை விமர்சித்து பாக்கியராஜ் பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது.“நம்ம ஆளு, சின்ன வீடு போன்ற படங்களை எடுத்த பாக்கியராஜ் இப்படி பேசலாமா?” என்று பிரதீப் ரங்கநாதன் ரசிகர்கள் அப்போது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில், அதே விருது விழா மேடையில் மீண்டும் பேசிய பாக்கியராஜ்,“புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால்தான் பார்த்திபன், பாண்டிராஜன் மாதிரியான இயக்குநர்கள் உருவாக முடியும். இயக்குநர்கள் புதுசா சிந்திக்கணும். அடுத்தவன் சட்டையை ஆல்ட்ரேஷன் பண்ணி போட்டா நல்லாத்தான் இருக்கும்… ஆனா புதுசா இருக்காது” என்று கூறினார்.மேலும், ‘காதல் என்பது பொதுவுடமை’ போன்ற படங்கள் வெளியானபோது நிறைய எதிர்ப்புகள் வந்தாலும், அதற்காக பயந்து நிறுத்திவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்தால்தான் வெற்றி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த பேச்சை, ‘ஜன நாயகன்’ ரீமேக் சர்ச்சையுடன் இணைத்து, பாக்கியராஜ் மறைமுகமாக அந்த படத்தைத் தான் விமர்சித்ததாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காக ‘ஜன நாயகன்’ உருவாகிறது என்ற குற்றச்சாட்டுகள் வலுவாக பேசப்படும் நிலையில், பாக்கியராஜின் இந்த கருத்து மேலும் தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக அமைந்துள்ளது.
இதனுடன், இயக்குநர் வினோத் குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.“சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற ஒரிஜினல் கதைகளால் கவனம் பெற்ற வினோத், அஜித் மற்றும் விஜய் படங்களில் பணியாற்றத் தொடங்கிய பிறகு தொடர்ந்து மற்றவர்களின் கதைகளையே படமாக்கி வருகிறார்” என்றும் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
மொத்தத்தில், ‘ஜன நாயகன்’ ரீமேக் விவாதம், பாக்கியராஜ் பேச்சு, ரசிகர்கள் ட்ரோல் ஆகியவை ஒன்றாக இணைந்து, படத்தைச் சுற்றிய சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.
English Summary
Jana Nayagan remake controversy Directors should think for themselves Sivakarthikeyan fans troll Pakiyaraj speech by making it viral