கூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலை தொக்கு..!
curry leaves thokku recipe in tamil
தேவையான பொருட்கள் :
கறிவேப்பிலை - ஒரு கட்டு
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
சின்ன வெங்காயம் - 15
பூண்டு பல் - 10
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்து அரைக்க:
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 5
செய்முறை :
வெங்காயம், பூண்டு தோல் உரித்து தண்ணீரில் அலசி கொள்ளவும். கறிவேப்பிலையையும் உருவி நன்கு அலசி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு வெடித்தவுடன் வெந்தயம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும். பின் மிளகும், மிளகாய் வற்றலும் சேர்த்து வறுக்கவும்.
வறுத்தவை ஆறியதும் கறிவேப்பிலையை சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெயை சூடாக்கவும். பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
நெல்லியளவு புளியை அரை கப் தண்ணீரில் ஊற விட்டு கரைத்து சேர்க்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். அரைத்த விழுது சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பைக் குறைத்து வைக்க வேண்டும். சிறு துண்டு வெல்லம் இருந்தால் சேர்க்கலாம்.
எண்ணெய் மேலே வரும் பொழுது அடுப்பைக் குறைத்து சிறிது நேரம் வைக்கவும். நன்கு சுண்டி வர வேண்டும்.
ஆற விட்டு ஒரு டப்பாவில் எடுத்து வைக்கவும். இப்போது சுவையான கறிவேப்பிலை தொக்கு ரெடி.
English Summary
curry leaves thokku recipe in tamil