கேரட் குருமா... Best breakfast ரெசிபி... செஞ்சு பாருங்க...!
Carrot kuruma Best breakfast recipe Try it
கேரட் குருமா
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
கேரட் - அரை கிலோ (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
தேங்காய் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 6
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 3 (நறுக்கியது)
ஏலக்காய் - 2
இலவங்கம் - 2
பட்டை - 1 (சிறியது)
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :
முதலில் கேரட்டை தனியாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், கசகசா போட்டு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, ஏலக்காய், இலவங்கம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு நன்கு வதக்கி, மஞ்சள் தூள், வேக வைத்துள்ள கேரட், அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவை ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.குழம்பானது சற்று கெட்டியானதும், அதனை இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான கேரட் குருமா ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
English Summary
Carrot kuruma Best breakfast recipe Try it