அவரைக்காய் வாங்கினால் இந்த துவட்டல் செஞ்சு பாருங்க சூப்பரா இருக்கும்...!
avarakkai thuvattal
அவரைக்காய் துவட்டல்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
அவரைக்காய் - அரை கிலோ
துவரம் பருப்பு - 1 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
பெரிய வெங்காயம் - 3
காய்ந்த மிளகாய் - 4
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :
முதலில், அவரைக்காய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை நன்கு வேக வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பிறகு தேங்காய் துருவலை அரைத்து கொள்ளவும்.
பின்பு அவரைக்காய் போட்டு கிளறி விட்டு வேகவைத்த பருப்பையும், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கிளறி வெந்தவுடன் இறக்கினால் அவரைக்காய் துவட்டல் ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : ரச சாதம், சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.