பேபி கார்ன் ஃப்ரைடு ரைஸ்... ஈவினிங் snacks கு best one...!
Baby corn fried rice best one for evening snacks
பேபி கார்ன் ஃப்ரைடு ரைஸ்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
பேபி கார்ன் - கால் கிலோ
காரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
பட்டாணி - 100 கிராம்
கொத்தமல்லித் இலை - 100 கிராம்
புதினா - 100 கிராம்
தேங்காய் - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 5 டீஸ்பூன்
எண்ணெய் - 5 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
முதலில்,பேபி கார்ன் ஃப்ரைடு ரைஸ் செய்வதற்கு முதலில் தேங்காயை அரைத்து வடிகட்டி பாலெடுத்து அரிசியுடன் சேர்த்து உதிரியாக வேக வைத்து வடித்துக் கொள்ளவும்.பிறகு ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய பேபி கார்ன், காரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், உப்பு, சிறிது தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கிளறி கொத்தமல்லித் தழை மற்றும் புதினாவை போட்டு நன்கு வதக்கவும்.கடைசியாக உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறி சிறிது நேரம் மூடி வைக்கவும். நெய்யை மேலே ஊற்றி ஒரு முறை கிளறி இறக்கவும். சுவையான பேபி கார்ன் ஃப்ரைடு ரைஸ் ரெடி.
English Summary
Baby corn fried rice best one for evening snacks