அமெரிக்க சுவையே தமிழ்நாட்டை அடைத்தது! – சினமன் ரோல்ஸ் ஹிட் டெஸர்ட் பட்டியலில் முதலிடம் பிடித்து கலக்கும் - Seithipunal
Seithipunal


Cinnamon Rolls 
சினமன் ரோல்ஸ் என்பது மென்மையான dough-ஐ சக்கரை மற்றும் சினமன் தூள் கலவையால் பூசி உருட்டி வெந்து வரும் ஒரு மிதமான இனிப்பு ரொட்டி. மேல் பக்கத்தில் க்ரீம் சீஸ் ஐசிங் சேர்த்தால் அது மேலும் mouth-melting dessert ஆக மாறுகிறது.
தேவையான பொருட்கள் (Ingredients)
Dough-க்கு:
மைதா மாவு – 2 ½ கப்
பால் – ¾ கப் (சுடசுட)
சர்க்கரை – 3 tbsp
ஈஸ்ட் – 1 tbsp
உப்பு – ½ tsp
பட்டர் – 3 tbsp
முட்டை – 1
Filling-க்கு:
சினமன் தூள் – 2 tbsp
ப்ரவுன் சர்க்கரை – ½ கப்
உருகிய பட்டர் – 3 tbsp
Icing-க்கு (விருப்பம்):
க்ரீம் சீஸ் – 2 tbsp
பொடி சர்க்கரை – ½ கப்
பட்டர் – 1 tbsp
வனிலா எசென்ஸ் – ½ tsp
பால் – 1 tbsp (தேவைக்கேற்ப)


செய்முறை (Preparation Method in Tamil)
Dough தயாரித்தல்
வெந்நீரில் ஈஸ்ட் + சர்க்கரை சேர்த்து 10 நிமிஷம் ஊறவிடவும் (frothy ஆக வேண்டும்).
ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா + உப்பு + உருகிய பட்டர் + முட்டை சேர்க்கவும்.
இதில் ஈஸ்ட் கலவையை சேர்த்து மென்மையான மாவாக பிசைய வேண்டும்.
மாவை 1 மணி நேரம் மூடி வைத்து புளிக்க விடவும் (double ஆகும் வரை).
Filling தயாரித்தல்
ஒரு பௌலில் ப்ரவுன் சர்க்கரை + சினமன் தூள் கலந்து வைத்துக்கொள்ளவும்.
Roll உருவாக்குதல்
புளித்த மாவை நீளமாகப் பரப்பவும்.
மேலே உருகிய பட்டர் தடவி, சினமன் – ப்ரவுன் சர்க்கரை கலவையை சமமாகப் பரப்பவும்.
மாவை ஒரு முனையில் இருந்து உருட்டி ஒரு log போல செய்யவும்.
அதனை 1.5 inch துண்டுகளாக வெட்டி ஒரு பேக்கிங் தட்டில் அடுக்கவும்.
Baking
Oven-ஐ 180°C–க்கு முன் சூடு செய்து, 20–25 நிமிடங்கள் gold brown ஆகும் வரை பேக் செய்யவும்.
Icing சேர்த்தல்
Cream cheese + பட்டர் + பொடி சர்க்கரை + வனிலா சேர்த்து நன்றாக கலக்கவும்.
வெந்த Cinnamon Rolls மீது இன்னும் சூடாக இருக்கும்போதே இந்த ஐசிங்கை தடவவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

American flavors have taken over Tamil Nadu Cinnamon Rolls top hit dessert list


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->