ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என நடித்து ரூ.7 கோடியை கவ்விய கும்பல்..! - 60 மணி வேட்டையில் 3 பேர் கைது...!
Gang impersonates Reserve Bank officials and extorts 7 crore 3 arrested 60 hour manhunt
பெங்களூரு நகரை அதிரவைத்த பெரும் கொள்ளை, பட்டப்பகலில் ஏடிஎம் பணவேன் கடத்தப்பட்டு ரூ.7.11 கோடி லூட்டி செல்லப்பட்ட சம்பவம் போலீஸ் துறையையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சவுத் எண்ட் சர்க்கிள் அருகே உள்ள ஏடிஎம் மையத்திற்கு HDFC வங்கி கிளையிலிருந்து பணம் எடுத்துச் சென்ற வேன், வழக்கம்போல் பணிநிரப்பு செயல்பாட்டில் இருந்தது.
அந்த நேரத்தில், திடீரென ஒரு டொயோட்டா இன்னோவா கார் வந்து பணவேனை வழிமறித்து நிறுத்தியது.காரில் இருந்து இறங்கிய 7 பேர் கொண்ட கும்பல், தாங்கள் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என போலி அடையாளத்துடன் நடித்து, “ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும்” என கேட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் வலுக்கட்டாயமாக பணப்பெட்டிகளை தங்கள் காருக்குள் மாற்றி ஏற்றிச் சென்றுள்ளனர். பின்னர் வங்கி ஊழியர்களை நகரின் ஓரத்தில் இறக்கிவிட்டு, கோடிகளுடன் தப்பிச் சென்றுள்ளனர்.
காவல்துறை, சம்பவத்துக்குப் பின்னர் விசாரணையை தீவிரப்படுத்தி, பல சிறப்பு அணிகளை உருவாக்கி மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தியது. தொடர்ச்சியான 60 மணிநேர வேட்டைக்குப் பிறகு, மூன்று பேரை போலீசார் கைது செய்து கேஸில் பெரும் முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், கோவிந்தபுரா போலீஸ் நிலைய காவலர் ஒருவர், மேலும் பணம் நிரப்பும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் உட்பட மூவர் இருப்பது விசாரணையை இன்னும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இவர்களிடம் இருந்து ரூ.5.76 கோடி பணத்தை போலீசார் மீட்டெடுத்துள்ளனர்.
English Summary
Gang impersonates Reserve Bank officials and extorts 7 crore 3 arrested 60 hour manhunt