234 தொகுதிகளிலும் போட்டியிட தயாரா...? - விருப்ப மனு தாக்கல் தேதியை நீட்டித்த புஸ்ஸி ஆனந்த்...! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தனது எக்ஸ் தளப் பதிவில் கழகத் தோழர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளிலும் கழக வேட்பாளராக களம் இறங்க விருப்பம் தெரிவித்திருந்த உறுப்பினர்கள், தங்களின் விருப்ப மனுக்களை பெறவும் சமர்ப்பிக்கவும் இன்று (14.02.2026) கடைசி நாளாக முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் அமைப்புசார் பணிகள் காரணமாக பலர் குறிப்பிட்ட காலக்கெடுவில் மனுக்களை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, தோழர்களின் கோரிக்கையை ஏற்கும் வகையில் மனு சமர்ப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பின்படி, வரும் 20ஆம் தேதி (20.02.2026) வரை தலைமை நிலையச் செயலகத்தில் விருப்ப மனுக்களை நேரடியாக சமர்ப்பிக்கலாம்.

அதுவே இறுதி நாளாகும் என்றும், கழகத் தலைவரின் ஒப்புதலுடன் இந்த அவகாச நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ready contest 234 constituencies Pussy Anand extends date filing nomination papers


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->