சித்தூர் நர்சிங் கல்லூரியில் துயர அலை! 19 வயது மாணவி விடுதி மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு...!
Tragedy strikes Chittoor Nursing College 19 year old student dies after jumping from hostel floor
ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஒரு நர்சிங் மாணவி விடுதி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை பரப்பியுள்ளது. பீஎஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி நர்சிங் படித்து வந்த 19 வயது பல்லவி, கடந்த வியாழக்கிழமை மாலை திடீரென மனஅழுத்தத்திற்குள் சிக்கியபோல் விடுதி மாடியில் இருந்து குதித்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த நேரத்தில் அங்கு இருந்த மாணவிகளும், விடுதி ஊழியர்களும் பெரும் அதிர்ச்சியில் பல்லவியை உடனே மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பல மணி நேர போராட்டத்திற்குப் பின், வெள்ளிக்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்தது மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து, பல்லவியின் குடும்பத்தினர் கல்லூரி மற்றும் விடுதி நிர்வாகத்தின் அலட்சியம் தான் இந்த துயரத்திற்கு காரணம் எனக் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர்.கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குள் இது இரண்டாவது மாணவி உயிரிழப்பு என்பதும் அச்சத்தைக் கூட்டியுள்ளது.
அக்டோபர் 31ம் தேதி முதலாமாண்டு மாணவி ஒருவர் தூக்கமருந்து உட்கொண்டு உயிரிழந்த சம்பவம் இன்னும் கல்லூரி வளாகத்தில் மறந்திருக்காத நிலையில், மீண்டும் நடந்த இந்த மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதே மாவட்டத்தில் இதற்கு முன் இரண்டு பொறியியல் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதில் ஒருவர் உயிரிழந்தார்.
மற்றொருவர் தற்போது சிகிச்சையில் உள்ளார். மேலும், கடந்த வாரமே ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஒரு பொறியியல் மாணவர் தற்கொலை செய்து கொண்டது கல்வி வளாகங்களில் தொடர்ச்சியான மனஅழுத்தச் சம்பவங்களுக்குச் சுட்டிக்காட்டாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் முழுவதும் மாணவர்கள் உயிரிழப்புகள் தொடர்ச்சியாக நிகழ்வது பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர் சமூகம் ஆகியோரிடையே தீவிர அச்சத்தையும் கவலையையும் பரப்பியுள்ளது.
English Summary
Tragedy strikes Chittoor Nursing College 19 year old student dies after jumping from hostel floor