திருமண ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி - ஒடிசாவில் சோகம்.!!
youth died for electric shock attack in odisa
ஒடிசா மாநிலத்தில் உள்ள டென்கனல் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது மணமக்கள் ஊர்வலமாக வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த ஊர்வலத்தின்போது வாகனத்தில் டிஜே இசை ஒலிப்பெருக்கி மூலம் ஒலிக்கப்பட்டது. இந்த ஒலிப்பெருக்கி மின்சார ஒயர் மீது உரசியதால், வாகனத்தில் மின்சாரம் பாய்ந்த நிலையில் அந்த வாகனத்தில் இருந்த 6 பேர் தூக்கி வீசப்பட்டனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் 6 பேரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில், அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
மீதமுள்ள ஐந்து பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth died for electric shock attack in odisa