பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாட்சப் ஸ்டேட்ஸ் - வாலிபருக்கு வலைவிரித்து போலீசார்.! - Seithipunal
Seithipunal


பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாட்சப் ஸ்டேட்ஸ் - வாலிபருக்கு வலைவிரித்து போலீசார்.!

கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் மற்றும் பொதுமக்கள் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. 

இந்தப் போரில் அப்பாவி பொதுமக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்தியாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, கர்நாடகா மாநிலத்தில் உள்ள, ஹோஸ்பேட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆலம் பாஷா. இவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த இந்திய அரசுக்கு எதிராகவும் வாட்ஸ் அப்பில் நேற்று ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

இதையடுத்து அவர் விஜயநகர் காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார். அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாலிபர் ஒருவர் பாலசுதீனத்திற்கு ஆதரவாக வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for uplode whatsapp status support palastinam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->