பைக்கில் சாகசம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


பைக்கில் சாகசம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.!!

தற்போது இணையதளங்களில் காரின் பானெட்டில் அமர்ந்து மணப்பெண் ஸ்டண்ட் செய்வது, ஒரே வாகனத்தில் வாலிபரை கட்டிப்பிடித்தபடி இரண்டு இளம்பெண்கள் ஸ்டண்ட் செய்வது உள்ளிட்ட வீடியோ தான் பரவி வைரலாகி வருகிறது. 

இப்படி சாகசம் செய்யும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு போலீஸார் கடுமையான தண்டனைகளை வழங்கிய போதும், கடந்த சில மாதங்களில் இதுபோன்ற வழக்குகள் அதிகரித்துள்ளன. 

இதனை சமாளிக்க போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள், நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் இதுபோன்ற செயல்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஒரு விழிப்புணர்வு வீடியோவை டெல்லி காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், காதல் ஜோடி ஒன்று பொறுப்பற்ற முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், தனது பெண் துணையுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் ஆண் ஒரு சக்கரத்தில் இருசக்கரவாகனத்தை இயக்குகிறார். 

அப்போது பின்னாடி அமர்ந்திருந்த இளம்பெண் கீழே விழுகிறார். சாகசத்தில் ஈடுபட்ட இருவரும் ஹெமெட் அணியவில்லை. இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் பரவி தற்போது வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young woman stunt in bike with boy friend vedio viral


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->