மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லாவுக்கு ஓராண்டு தடை - காரணம் என்ன?  - Seithipunal
Seithipunal


மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லாவுக்கு ஓராண்டு தடை - காரணம் என்ன? 

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் சீமா பிஸ்லா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் பிரிவில் சீமா வெண்கலம் வென்றார். 

அவர் கடந்த 2021- ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் 50 கிலோ ரவுண்ட் ஆஃப் போட்டியில் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இவர் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாக புகார் எழுந்த நிலையில், சீமாவுக்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை விதித்து ஊக்க மருந்து தடுப்பு மையம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், அவருடைய தடைக்காலம் இந்த ஆண்டு மே மாதம் 12 அன்று தொடங்கியதாக தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

wrestler Seema Bisla ban one year


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->