கோவில் திருவிழாவில் நடனமாடிய இளம்பெண் மயங்கி விழுந்து பலி.!
women died heart attack in madhya pradesh
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கார்கோன் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் சோனம் கோவில் விழாவில் தனது கணவருடன் நடனம் ஆடிக்கொண்டிருந்தார். மேடையில் மகிழ்ச்சியாக நடனம் ஆடிக்கொண்டிருந்த அவர், திடீரென்று தடுமாறத் தொடங்கினார். பின்பு சரிந்து கீழே விழுந்து விட்டார்.
நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் எந்த அசைவும் இல்லாமால் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில், அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது உறுதியாகியுள்ளது. திருமணம் ஆகிய நான்கு மாதத்தில் இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
women died heart attack in madhya pradesh