கணவர், குழந்தையை தவிக்கவிட்டு காதலனுடன் ஓடிய பெண் - ராஜஸ்தானில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


கணவர், குழந்தையை தவிக்கவிட்டு காதலனுடன் ஓடிய பெண் - ராஜஸ்தானில் அதிர்ச்சி.!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள துங்கர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முகேஷ்-தீபிகா படிதார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். மும்பையில் பணியாற்றி வந்த முகேஷ், தனது மனைவி தீபிகாவை காணவில்லை என்று கடந்த மாதம் 15-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீஸார் விசாரணை நடத்திய போது தீபிகா குஜராத் மாநிலத்தில் உள்ள ஹிம்மத் நகரில் வசிக்கும் இர்பான் ஹைதரை சந்திக்க அடிக்கடி கேத் பிரம்மாவுக்கு பயணம் செய்தது தெரிய வந்தது. மேலும், ஹைதர் தீபிகாவை அழைத்துக்கொண்டு குவைத்திற்குத் தப்பிச் சென்றதும் தெரிய வந்தது.

இதற்கிடையே பர்தா அணிந்திருந்த தீபிகாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தனது மனைவியை இர்பான் ஹைதர் இஸ்லாம் மதத்தை தழுவும்படி தூண்டியதாக முகேஷ் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் தீபிகா, ஹைதரைச் சந்தித்தது மற்றும் குவைத்துக்கு விசா கிடைத்தது எப்படி? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

பெண் ஒருவர் தன் கணவர் மற்றும் 2 குழந்தைகளைத் தவிக்க விட்டு விட்டு காதலனுடன் குவைத்திற்கு தப்பிச் சென்ற சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman ran with boy friend to gujarat from rajasthan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->