ஆந்திராவில் சோகம் - சுற்றுலா சென்ற இடத்தில் நடன கலைஞர் தற்கொலை.!
woman dance master sucide in andira
ஆந்திராவில் சோகம் - சுற்றுலா சென்ற இடத்தில் நடன கலைஞர் தற்கொலை.!
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியை சேர்ந்தவர் ஹிமா. நடனக் கலைஞரான இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 7 வயதில் மகள் உள்ளார். இதற்கிடையே ஹிமாவிற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நடனக் கலைஞரான கணேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், ஹீமா கடந்த 10ம் தேதி பெங்களூரு பகுதியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் நண்பர்களுடன் ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர்கள் அனைவரும் ஒரு விடுதியில் தங்கி இருந்தனர்.

அப்போது ஹிமா விடுதி அறையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை , மருத்துவர்கள் ஹீமா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஹிமாவுடன் வந்திருந்த நடனக் கலைஞர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
woman dance master sucide in andira