இளம்பெண் மீது ஆசிட் வீச்சு..! மர்ம நபர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு...! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் இளம்பெண் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் எலுரு மாவட்டத்தை சேர்ந்தவர் யத்லா பிராஞ்சிகா(35). இவர் நகரில் உள்ள ஸ்மார்ட் பல் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணிபுரிகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது வீட்டு அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், யத்லா பிராஞ்சிகா மீது ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் அந்த பெண்ணின் வலது கண் மற்றும் மார்பகங்களில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து வலியால் அலறி துடித்த யத்லா பிராஞ்சிகா சிகிச்சைக்காக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஆசிட் வீசிய மர்ம நபர்களை பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும், அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக அரசாங்கம் நிற்கிறது என்றும் உள்துறை அமைச்சர் தனேதி வனிதா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman attacked with acid by two mysterious in Andhra


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->