கன்வார் யாத்திரை: கணவனை தோளில் சுமந்து 150 கி.மீ., துார பயணம் செய்த மனைவி: வைரல் ஆன வீடியோ..!
Wife carries husband on shoulders for 150 km during Kanwar Yatra
சிவபெருமானுக்கு பக்தி செலுத்தும் விதமாக கன்வார் யாத்திரை தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. புனித சவான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் இந்த புனித யாத்திரையின் போது, ஆயிரக்கணக்கான கன்வாரியர்கள் புனித கங்கை நீரை எடுத்து மகாதேவருக்கு வழங்க நீண்ட தூரம் பயணம் செய்வார்கள்.
இந்த கன்வார் யாத்திரையில் நடந்த சம்பவம் ஒன்று நெகிழ வைத்துள்ளது. அதாவது, உ.பி.,யை சேர்ந்த ஒரு பெண், முடங்கிப்போன தனது கணவரை 150 கி.மீ., துாரம் வரை தோளில் சுமந்து பயணம் செய்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.
உ.பி., மாநிலத்தின் மோடி நகரில் உள்ள பக்கர்வா கிராமத்தை சேர்ந்த ஆஷா. தனது இரண்டு குழந்தைகளுடன்,தனது கணவர் சச்சினை சுமந்துகொண்டு ஹரித்வாரில் இருந்து மோடி நகருக்கு கால்நடையாகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். ஆஷாவின் கணவர் சச்சினுக்கு கடந்த ஆண்டு நடந்த முதுகுத் தண்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு இடுப்பு முதல் கீழ் வரை செயலிழந்து போயுள்ளது.
-w3u3k.png)
இந்நிலையில் தனது கணவர் சச்சின் மீண்டும் ஒருநாள் தனது சொந்த காலில் நிற்க முடியும் என்ற நம்பிக்கையுடன், முடங்கிப்போயிருந்த அவரது கணவரை முதுகில் சுமந்து 150 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கன்வார் யாத்திரையில் தனது கணவர் சச்சினை முதுகில் சுமந்து ஆஷா செல்லும் காட்சியை சிலர் வீடியோவாக எடுத்து சமூக ஊடங்கங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதனை பார்த்த நெட்டிசன்கள் அந்த கணவர் அதிர்ஷ்டசாலி என்று பாராட்டியதோடு, அந்தப் பெண்ணின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் பக்தியைப் பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.
English Summary
Wife carries husband on shoulders for 150 km during Kanwar Yatra