நாளை மறுநாள் முதல் கனமழை எச்சரிக்கை! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த மேற்குவங்க மாநில அரசு உத்தரவு!
weast bangal heavy rain alert
மேற்கு வங்கத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
முதல்வர் மமதா பானர்ஜி நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அனைத்து துறைகளும் உயர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் அனுப்பியுள்ளார். தேவையான நடவடிக்கைகளை முன்னதாகவே திட்டமிட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் பெய்த கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. அந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்ததால் இந்த முறை அரசு அதிக முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறது.
மழை பாதிப்புகளை சமாளிக்க 24 மணி நேரமும் நிலைமையை கண்காணிக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் தரப்பிலிருந்து புகார்கள் மற்றும் ஆலோசனைகளை பெற தனிப்பட்ட குழுவும் செயல்படுகிறது.
English Summary
weast bangal heavy rain alert