சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...! இன்றைய ஒகேனக்கல் நீர்வரத்து எவ்வளவு தெரியுமா...?
Tourists happy Do you know how much water flowing Hogenakkal today
கர்நாடகாவில் காவிரி கரையோரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து ஏற்றத்தாழ்வுடன் மாறி மாறி வருகிறது.இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 6,500 கனஅடி நீர்வரத்து பதிவாகியது. இதைத்தொடர்ந்து இன்றும் அதே அளவு நீர்வரத்து பதிவாகியுள்ளது.

இதன் தாக்கத்தில் சினிபால்ஸ்,மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் முழு வலிமையுடன் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.சுற்றுலா பயணிகள் பரிசலில் ஏறி காவிரி ஆற்றின் இருபுறமும் பசுமை சூழ்ந்த காட்சிகளை ரசித்தனர்.
மேலும், தொங்கு பாலத்தின் மேல் நின்று பாறைகளின் நடுவே வீழும் தண்ணீரின் சலசலப்பைக் கண்டு மயங்கினர்.மெயின் அருவியில் குளித்து புத்துணர்ச்சி பெற்றனர்; பெண்கள், குழந்தைகள் குடும்பத்தோடு நீரில் விளையாடி மகிழ்ந்தனர்.
மேலும், மீன் வறுவல் மற்றும் சாப்பாட்டுகளை வாங்கி பூங்கா பசுமையில் அமர்ந்து சுவைத்தனர்.இதே நேரத்தில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் எப்போதும் கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Tourists happy Do you know how much water flowing Hogenakkal today