மதுக் கடையை குறிவைத்த கொள்ளையன்! விரட்டி பிடித்த காவலர்கள்...! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் பொன்னேரி அருகே தச்சூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில், நேற்று இரவு திடீரென நடந்த கொள்ளை முயற்சி பரபரப்பு ஏற்படுத்தியது.

அங்கு கடை மூடப்பட்டிருந்த நிலையில், ஷட்டரில் துளை போட்டு உள்ளே புகுந்து கொள்ளையடிக்க ஒருவன் தந்திரம் பண்ணியுள்ளார். அந்த நேரத்தில், கவரைப்பேட்டை காவலர்கள் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் சந்தேகத்துடன் கடையை சுற்றி பார்த்த காவலர்கள் , கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அவரது பெயர் வினோத் என்றும் அவருக்கு 30 வயது என்றும் தெரியவந்தது.தற்போது, வினோத்திடம் காவலர்கள் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

robber targeted liquor shop police chased him away and caught him What happened


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->