பிசிசிஐ தலைவர் ஆனார் சி.எஸ்.கே முன்னாள் வீரர் மிதுன் மனாஸ்!
BCCI CSK Mithun Manhas
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் ரோஜர் பின்னி 70 வயதில் தனது பதவியை விலக்கிக் கொண்டார்.
இதையடுத்து துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக தலைவராக பொறுப்பேற்று பணிகளை மேற்கொண்டார். புதிய தலைவரை தேர்வு செய்யும் செயல்முறை முடிவுக்கு வந்த நிலையில், பிசிசிஐயின் 37ஆவது தலைவராக சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர் மிதுன் மனாஸ் தேர்வாகியுள்ளார்.
புதிய தலைவராக மிதுன் மனாஸ் பொறுப்பேற்றும் நிலையில், ராஜீவ் சுக்லா துணைத் தலைவராகவும் தேவஜித் சைக்யா செயலாளராகவும் தொடர்கிறார்கள். சிறப்பான உள்நாட்டு கிரிக்கெட் சாதனைகளைப் பெற்றிருந்தாலும், மிதுன் மனாஸ் இந்திய தேசிய அணிக்காக ஒரே ஒரு போட்டியிலும் விளையாடவில்லை.
ஆனால், அவர் 157 முதல் தர போட்டிகளில் 9714 ரன்கள் குவித்து 27 சதங்களைப் பதிவு செய்துள்ளார். டெல்லி அணியின் முன்னாள் கேப்டனாக விளங்கி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் அணிகளுக்காக விளையாடிய அனுபவமும் பெற்றுள்ளார்.