அறிவுறுத்தலை வழங்கிய உச்ச நீதிமன்றம், டெல்லியில் தீவிரமடைந்துள்ள தண்ணீர் நெருக்கடி - Seithipunal
Seithipunal


தற்போது பருவநிலை காரணமாக டெல்லியில் தண்ணீர் பஞ்சம் தீவிரமடைந்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஜூன் மாதம் 7ஆம் தேதி கூடுதலாக 137 கன அடி தண்ணீர் திறக்குமாறு ஹிமாச்சலப் பிரதேச அரசுக்கு டெல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து சுப்ரீம் கோர்ட் அறிக்கையில்படி, "இமாச்சல பிரதேச அரசு கூடுதல் தண்ணீர் திறக்க சம்மதித்துள்ளது. 

வஜிராபாத் தடுப்பணை மூலம் தண்ணீர் திறக்க வசதி செய்து தருமாறு ஹரியானா அரசுக்கு உத்தரவிட்டது. முதலில் ஹரியானாவுக்குத் தெரிவித்து தண்ணீர் திறந்துவிடுமாறு ஹிமாச்சல் அரசுக்கு நீதிமன்றம் கூறியது". மேலும், தண்ணீரை வீணாக்கக் கூடாது என அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியின் அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து கூடுதல் தண்ணீர் வழங்கக் கோரி டெல்லி அரசு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 

இந்த நாட்களில் தேசிய தலைநகர் கடுமையான வெப்பத்திற்கு மத்தியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இதற்காக தண்ணீர் வீணாவதை தடுக்க டெல்லி அரசான ஆம் ஆத்மி கட்சி கடும் நடவடிக்கை எடுத்துவந்துள்ளது. தண்ணீரை வீணாக்கினால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுமான தளங்கள் அல்லது வணிக நிறுவனங்களில் சட்டவிரோத குடிநீர் இணைப்பை துண்டிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

water scarcity in delhi supreme court


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->