ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் - காரணம் என்ன?
visthara airlines flight delay take off for engine falt in chennai airport
ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் - காரணம் என்ன?
சென்னையில் உள்ள மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6:55 மணிக்கு, டெல்லி செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் புறப்பட தயாரானது.
அப்போது, விமானத்தின் எந்திரங்களை விமானி சரிபார்த்துள்ளார். அதில் கோளாறு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த விமானத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் எந்திரம் பழுது பார்க்கப்பட்டு காலை 8:10 மணிக்கு புறப்பட்டு சென்றது.
விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். விமானத்தில் ஏற்பட்ட எந்திரக் கோளாறை சரியான நேரத்தில், விமானி கண்டுபிடித்ததால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.
English Summary
visthara airlines flight delay take off for engine falt in chennai airport