பாலத்திற்கு கீழே கிடந்த அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்த இளைஞர்கள்.. விரைந்த போலீசார்.!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அனக்காப் பள்ளி அருகே கொத்த பள்ளம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சில மர்ம நபர்கள் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி அவரது உடல் பாகங்களை அங்கிருக்கும் பாலம் ஒன்றுக்கு தேங்கியுள்ள தண்ணீரில் வீசி சென்றுள்ளனர்.

அப்பகுதியில் சில இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீரில் கை, கால்கள் மற்றும் உடல் பாகங்கள் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி உடனடியாக அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். 

இந்த தகவலின் பெயரில், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து உடல் பாகங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனக்கா பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது பற்றி வழக்கு பதிவு செய்து இந்த உடல் பாகங்கள் யாருடையது? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர்கள் விளையாடும் இடத்தில் இப்படி கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் கிடந்ததால் அப்பகுதியில் இன்னும் பரபரப்பு குறையவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishakapatnam police Found parts of Body and investigation


கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?
Seithipunal