பெரும் பரபரப்பு.. கர்நாடகாவில் ஒலித்த "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" முழக்கம்.. வைரலாகும் வீடியோ..!!
Video gone viral Pakistan Zindabad in Karnataka
கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வந்த நிலையில் அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் 136 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த நிலையில் பெலகாவி வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆசிப் சேத்தின் வெற்றி பெற்றார். இந்த வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மர்ம நபர்கள் சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பினர்.

இன்று பிற்பகல் ஆசிப்பின் வெற்றி உறுதியானதால் ஏராளமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்பு திரண்டனர். அதன்பிறகு வண்ணப் பொடிகளை வீசி, இசை வாசித்து, வெற்றிக் கோஷமிட்டனர். அப்போது, காங்கிரஸ் கொடியை ஏந்திய சிலர், "ஜிந்தாபாத் ஜிந்தாபாத் பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என 3 முறை முழக்கங்களை எழுப்பினர்.
இதன்போது அருகில் இருந்த காவல்துறையினர் அவர்களை எச்சரித்துள்ளனர். எனினும் கோஷம் எழுப்பியவர்களை போலீசார் கைது செய்யவில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எடுப்பதாக கூறப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள கர்நாடக போலீசார் "ஆர்.பி.டி கல்லூரி அருகே நடைபெற்ற வெற்றி விழாவின் போது சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபந்த் என்று முழக்கமிட்டனர். அப்பொழுது 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி இருந்தனர். அனைவரது முகத்திலும் வண்ணம் பூசப்பட்டிருந்ததால் கோஷம் போட்டது யார் என்று அடையாளம் காண முடியவில்லை. இதுகுறித்து திலகவாடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்படும்" என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Video gone viral Pakistan Zindabad in Karnataka