'வந்தே மாதரம்' 150-வது ஆண்டு: நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் - பிரதமர் மோடி பெருமிதம்!
Vande Mataram Parliament PM Modi
நடைபெற்று வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில், நாட்டின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு நிறைவையொட்டி இன்று (டிச. 8) சிறப்பு விவாதம் நடைபெற்றது. மக்களவையில் விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
பிரதமரின் உரை
புனிதப் பாடல் குறித்த விவாதத்தைத் தொடங்கி வைப்பதில் பெருமை கொள்வதாகப் பிரதமர் தெரிவித்தார்.
விடுதலைப் போர் முழக்கம்: "வந்தே மாதரம் பாடல்தான் இந்திய நாட்டின் விடுதலைக்கு முக்கியப் பங்காற்றியது. வந்தே மாதரம் என்பதற்கு தாய் மண்ணே தலை வணங்குகிறேன் என்பது பொருள்," என்று அவர் விளக்கம் அளித்தார்.
ஆங்கிலேயருக்குப் பதிலடி: 'God Save the Queen' பாடலை இந்தியர்கள் பாட வேண்டும் என்று பிரிட்டிஷார் விரும்பியபோது, அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், இந்தியர்களின் உறுதியைப் பறைசாற்றும் பாடலாகவும் 'வந்தே மாதரம்' அமைந்தது.
எதிர்காலச் சந்ததி: "இந்த விவாதத்தின் மூலம், எதிர்காலச் சந்ததியினர் வந்தே மாதரம் குறித்துக் கற்பிக்கப்படுவர்," என்றும், இப்பாடல் தலைமுறைகளைக் கடந்து உத்வேகம் அளித்து வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மாநிலங்களவையில் இந்தப் பாடலின் சிறப்பு விவாதத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்தக் கூட்டத்தொடர் வரும் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
English Summary
Vande Mataram Parliament PM Modi