கள்ளக்காதல் கொடுத்த மரண அடி....! 17 வயது சிறுவனுடன் விபரீத முடிவெடுத்த பெண்... குடும்பத்தினர் கதறல்...! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமணமான இளம்பெண்ணும், 17 வயது சிறுவரும் தொடர்வண்டி முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் அவர்களுக்கிடையேயான நெருங்கிய தொடர்பே காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லால்குடி அருகிலுள்ள மணக்கால் தொடர்வண்டி கடவுப் பாதை பகுதியில், சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கன்னியாகுமரி விரைவு தொடர்வண்டி நேற்று முன்தினம் இரவு பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது, அங்கு வந்திருந்த இருவர் திடீரென தொடர்வண்டி முன் பாய்ந்தனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும், விருத்தாசலம் தொடர்வண்டி காவல் ஆய்வாளர் பிருந்தா தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் உயிரிழந்தவர்களின் அடையாளம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் திருச்சி மாவட்டம் போதாவூர் கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி (26) மற்றும் திருச்சியைச் சேர்ந்த 17 வயது சிறுவர் என்பது தெரியவந்தது.

புவனேஸ்வரிக்கு திருமணமாகி ஒன்பது வயது மகளும், ஏழு வயது மகனும் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.புவனேஸ்வரிக்கும், அவருடைய உறவினரான அந்தச் சிறுவருக்கும் கடந்த சில மாதங்களாக நெருங்கிய பழக்கம் ஏற்பட்டிருந்ததாகவும், அது பின்னர் காதலாக மாறியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உறவு குறித்து இரு குடும்பத்தினருக்கும் எவ்வித தகவலும் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. அந்தச் சிறுவர் பட்டயப் படிப்பில் கல்வி கற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவத்தன்று, சிறுவர் பொருட்கள் வாங்கச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார்.

அதேபோல், புவனேஸ்வரி பூண்டி மாதா திருத்தலத்திற்கு சென்று வருவதாக தனது கணவரிடம் தெரிவித்து வீட்டை விட்டு சென்றுள்ளார்.பின்னர் இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பிறகு மணக்கால் தொடர்வண்டி கடவுப் பாதை அருகே வந்த அவர்கள், இருசக்கர வாகனத்தை அங்கு நிறுத்திவிட்டு, அந்த வழியாக வந்த தொடர்வண்டி முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துயர முடிவுக்கு அவர்களைத் தூண்டிய காரணம் என்ன என்பது இதுவரை தெளிவாகவில்லை. குடும்பப் பிரச்சினையா, வேறு ஏதேனும் மனஅழுத்தமா அல்லது பிற காரணங்களா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறியும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fatal blow from false love woman made bizarre decision 17 year old boy Family cries


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->