மாட்டிக் கொண்ட இலங்கை தம்பதி...! தமிழக சட்டசபை தேர்தலில் முறைகேடாக ஓட்டுப்போட்ட விவகாரத்தில் அதிரடி கைது...!
Sri Lankan couple caught Arrested connection illegal voting Tamil Nadu Assembly elections
இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குணேஸ்வரன் (69) மற்றும் அவரது மனைவி நாகுலாம்பிகை (60) ஆகியோர், தமிழகத்தில் வசித்தபடியே வாக்காளர் அடையாள அட்டை பெற்று தேர்தலில் வாக்களித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சட்ட நடவடிக்கையில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குணேஸ்வரன் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை தியாகராயநகர் பகுதியில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். அங்கு சிறிய அளவில் நகை விற்பனை தொழிலும் நடத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது மகளும், பிற குடும்பத்தினரும் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்றனர்.இலங்கை கடவுச்சீட்டை வைத்தே தமிழகத்தில் தங்கியிருந்த குணேஸ்வரன், விதிமுறைகளுக்கு முரணாக தமிழக வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அடையாள ஆவணத்தை பயன்படுத்தி அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததும் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் குணேஸ்வரன் மற்றும் நாகுலாம்பிகை ஆகியோர் மீது நான்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.இதற்கிடையில், நேற்று முன்தினம் இருவரும் இலங்கை திரும்புவதற்காக சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
அப்போது பயண ஆவணங்களை அதிகாரிகள் பரிசோதித்தபோது, அவர்களிடம் தமிழக வாக்காளர் அடையாள அட்டை இருந்தது கண்டறியப்பட்டது.இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பின்னர் இந்த விவகாரம் குறித்து மேலும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Sri Lankan couple caught Arrested connection illegal voting Tamil Nadu Assembly elections