தவெக மீது மீண்டும் 'குதிரை பேரம்' புகார்? லட்டு போல் திமுகவிடம் கிடைத்த ஆதாரம்! ஆளுநரை சந்திக்க திமுக திட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் மீண்டும் 'குதிரை பேரம்' குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கர் அளித்த பேட்டியை அடிப்படையாகக் கொண்டு, தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து மீண்டும் புகார் அளிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 107 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பெற்று ஆட்சியை அமைத்தது. அந்தக் கூட்டணியில் இடம்பெற்ற சில கட்சிகளுக்கு அமைச்சரவையிலும் இடம் வழங்கப்பட்டது.

இதற்கிடையில், அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆறு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் இந்த இணைப்பு நடைபெற்றது. அந்த நிகழ்வில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்து கொண்ட நிலையில், ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும் கட்சியில் இணைந்ததாக கூறப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர், "தீயசக்தி திமுகவை எதிர்க்கவே எம்.ஜி.ஆர். அதிமுகவை உருவாக்கினார். ஆனால் தற்போது அந்த இயக்கம் சரியான திசையில் செல்லவில்லை. எடப்பாடி பழனிசாமியின் தவறான முடிவுகளால் கட்சி பலவீனமடைந்துள்ளது. அதனால் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்தை கேட்ட பிறகே தவெகவில் இணையும் முடிவை எடுத்தோம்" என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "90 சதவீத நிர்வாகிகள் தவெகவில் சேர வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். மேலும், விஜய் தலைமையிலான அரசு எங்களை அணுகியதால், நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தோம்" என்று கூறினார்.

எம்.ஆர். விஜயபாஸ்கரின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக, "அரசு எங்களை அணுகியது" என்ற அவரது கருத்தை முன்வைத்து, ஆளும் தரப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை கட்சி மாறச் செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டை திமுக மீண்டும் முன்வைக்கத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், தமிழகத்தில் 'குதிரை பேரம்' நடைபெறுகிறது என்ற புகாரை மீண்டும் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் அளிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஆளுநரை தனித்தனியாக சந்தித்து புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய அரசியல் நகர்வு, தமிழக அரசியலில் அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Horse trading allegations against TVK again DMK secures evidence on a platter DMK plans to meet the Governor


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->