வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா: இன்று முதல்வர் ஸ்டாலின் கேரளா பயணம்! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வைக்கத்தில் நிர்மாணிக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை திறந்து வைக்க கேரளாவிற்கு இன்று (டிசம்பர் 11) பயணமாகி உள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள வைக்கம், கோயில் நுழைவு உரிமைக்காக போராடியவர்களின் நினைவிடமாகும். இதற்காக பெரியார் பங்கேற்று பெற்ற வரலாற்றுச் சாதனையை நினைவூட்டும் வகையில், 1994 ஆம் ஆண்டு பெரியாரின் சிலையுடன் கூடிய நினைவகம் திறக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த நினைவகம் பழமையாகியதால், ₹8.14 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

புதிய நினைவகத்தில், பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நிரந்தர கண்காட்சி, நூலகம், பார்வையாளர்களுக்கான மாடம், சிறுவர் பூங்கா ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. மறுசீரமைக்கப்பட்ட நினைவகம் மற்றும் நூலகத்தை, நாளை (டிச.12) முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். நிகழ்வில், கேரள முதல்வர் பினராயி விஜயனும் கலந்து கொண்டு தலைமை வகிக்கிறார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள மாநில திமுக அமைப்பாளர் கே.ஆர். முருகேசன் தலைமையில் கேரள பாரம்பரிய செண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vaikam Struggle Centenary Celebration Chief Minister Stalin visit to Kerala today


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->