உத்தரகாண்ட் வெள்ளம்: ரூ.5000 நிவாரணம் கொடுத்த அசிங்கப்படுத்தாதீங்க.. கொந்தளிக்கும் மக்கள்!
Uttarakhand flood Relief people protest
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் தாராலி, ஹர்ஷில் உள்ளிட்ட பல கிராமங்களை கடுமையாக பாதித்தது. வீடுகள், கடைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் சேதமடைந்தன. முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அரசு உடனடி நிவாரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.5,000 காசோலை வழங்கியது.
ஆனால், இந்த தொகை ஏற்பட்ட நஷ்டத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு என்று மக்கள் அதனை ஏற்க மறுத்தனர்.
மேலும், அனைத்தையும் இழந்த சூழலில் இந்த உதவி அவமானகரமானது என்று பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.
ஆனால், அதிகாரிகள் இது இடைக்கால நிவாரணம் மட்டுமே என்றும், முழு சேதத்தை மதிப்பீடு செய்த பிறகு சரியான இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.
இதற்கிடையில், வீடுகளை முற்றிலுமாக இழந்தவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொலைதூர பகுதிகளில் சிக்கியிருந்தவர்கள் ஹெலிகாப்டர்களின் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்த பேரிடரில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 49 பேர் காணாமல் போயுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்தப்பட்டுள்ளனர். அரசு மற்றும் மீட்பு குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர உதவிகளை விரைந்து மேற்கொண்டு வருகின்றன.
English Summary
Uttarakhand flood Relief people protest