வீடு புகுந்து இளம்பெண்ணை குண்டு கட்டாக தூக்கி.. மாமனார் செய்த கொடூரம்.! வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாத்தியா பாத் பகுதியில் இளம் பெண் ஒருவர் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

உத்திரபிரதேசம் மாநிலத்திலுள்ள காசியாபாத் அருகில் ஒரு கிராமத்தில் இருந்த இளம் பெண்ணை வீடு புகுந்து கொண்டு கட்டாக தூக்கி வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்து ஒரு கும்பல் கொடூரமாக அந்த பெண்ணை தாக்கியது. இதை பொதுமக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனரே தவிர அவரை காப்பாற்றவில்லை.

அந்தப் பெண்ணை அடித்ததுடன் மட்டுமல்லாமல் கோடாரியால் தாக்கி அந்த கும்பல் வெட்டவும் ஆரம்பித்தது. இதில் அந்த பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட, அவர் சரிந்து விழுகிறார். 

அந்த கும்பலில் இருந்த ஒரு நபர் கையில் கோடாரியுடன் வேடிக்கை பார்த்தால் பொதுமக்களை விரட்டி அடிக்கிறார். இதனால் பயந்து போன அவர்கள் யாரும் அந்த பெண்ணை காப்பாற்ற முன்வரவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

போலீசார் விசாரணையில் வரதட்சணை கொடுமையால் அந்த பெண் தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தொடர்ந்து அந்த கும்பல் மீது நெட்டிசன்கள் பயங்கரமாக தாக்கி கமெண்ட் போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் மாமனார் உட்பட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uttar Pradesh father In law attacking women for Domestic voilence


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->