உத்ரகண்ட்டில் நிலச்சரிவு..சிக்கி தவிக்கும் ராஜஸ்தான் பயணிகள்..!   - Seithipunal
Seithipunal


உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் ராஜஸ்தானைச் சேர்ந்த 400 பக்தர்கள் தங்களது மாநிலத்திற்கு திரும்பி செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

ராஜஸ்தானைச் சேர்ந்த 400 பயணிகள் உற்றகான்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசி மாவட்டத்திற்கு சென்றுவிட்டு தங்களது மாநிலத்திற்கு திரும்பி வரும்போது உத்தர்காசிக்கு அருகே கப்னானி என்ற பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவினால் ராஜஸ்தானைச் சேர்ந்த பயணிகள் தங்களது பயணத்தை தொடங்க முடியாமல் பாதி வழியிலேயே சிக்கிக் கொண்டு தவிக்கின்றனர்.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: “பயணிகள் அனைவரையும் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு மற்றும் பிற வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளன.” என்று தெரிவித்துள்ளனர். உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

utrakant land slide


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->