இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம்  29 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்.! - Seithipunal
Seithipunal


பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் கோடிக்கணக்கான பயனாளர்களைக் கொண்டுள்ளது. அதன் படி, வாட்ஸ்அப் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் பயனாளர் பாதுகாப்பு அறிக்கையை வெளியிட்டு வருகிறது. 

இந்த நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் இந்த மாதத்திற்கான அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் 29 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

இந்த வாட்ஸ் அப் கணக்குகளில், பயனாளர்களிடம் இருந்து எந்தவித புகார்களும் வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை அடிப்படையில் 10 லட்சத்து 38 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையில், பயனாளர்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் அதனை பெற்றுக்கொண்டு எடுக்கப்பட்ட பதில் நடவடிக்கை, சமூக தளம் தவறாக பயன்படுத்தப்படாமல் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் எழுதப்பட்டிருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty nine lakhs whatsapp accounts close in india


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->