பள்ளி ஆசிரியர் நியமன மோசடி: விசாரணையில் தப்பியோடிய மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏ கைது..!
Trinamool Congress MLA arrested in West Bengal in connection with school teacher recruitment scam
பள்ளி ஆசிரியர் நியமனத்தில் மோசடி செய்த புகாரில், மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா தலைமையிலான அரசு இயங்கி வருகிறது. இந்நிலையில் ஜிபன் கிருஷ்ணா சாஹா, பிர்பும் பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை தகவல் பெற்றதை அடுத்து சோதனைகள் தொடங்கப்பட்டன, அதன்பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜிபன் கிருஷ்ணாவை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அத்துடன், இந்த் மோசடி தொடர்பில், அவரது மனைவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் ஜிபன் கிருஷ்ணா சாஹா, கடந்த ஏப்ரல் 2023-இல் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டார், மே 2025-இல் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

பள்ளி ஆட்சேர்ப்பு ஊழலின் குற்றவியல் அம்சங்களை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறை அதன் பணமோசடி கோணத்தை விசாரித்து வருகிறது.
இது தொடர்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஜிபன் கிருஷ்ணா சாஹாவின் பர்வான் வீடு மற்றும் ரகுநாத்கஞ்சில் உள்ள அவரது மாமியார் குடும்பத்திற்குச் சொந்தமான சொத்துக்களை அதிகாரிகள் குழு ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் சஹா தனது மொபைல் போனை தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் வீசியதாகக் தெரியவந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், அவரது இரண்டு போன்களும் மீட்கப்பட்டு தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பிர்பும் மாவட்டத்தில் உள்ள தனிப்பட்ட உதவியாளரின் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் திரிணாமுல் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா வீட்டில் சோதனை நடத்திய நிலையில், அதை அறிந்த சகா, தனது வீட்டின் எல்லைச் சுவரில் ஏறி தப்பி ஓட முயன்றார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அப்போது அருகில் இருந்த விவசாய நிலத்தில் இருந்த சேற்றில் கால் சிக்கியபோது அவரை கைது செய்தோம் என்றும் அமலாக்கள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜிபன் கிருஷ்ணா சாஹா, கோல்கட்டாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும், அங்கு அவர் சிறப்பு அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.
English Summary
Trinamool Congress MLA arrested in West Bengal in connection with school teacher recruitment scam