விண்வெளி அறிவியலாளர் வெ.இராதாகிருஷ்ணன் பிறந்ததினம்!
Today is the birthday of space scientist V Rathakrishnan
உலகப் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் திரு.வெ.இராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்ததினம்!.
வெங்கடராமன் இராதாகிருஷ்ணன் (மே 18, 1929 – மார்ச் 3, 2011) உலகளாவியப் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர். இவர் சுவீடிய வேந்திய அறிவியல் மன்றத்தின் உறுப்பினராக இருந்தார். பெங்களூரில் உள்ள இராமன் ஆய்வுக் கழகத்தில் 1972 முதல் 1994 வரை இயக்குநராக இருந்து பின்னர் ஓய்வு பெற்றப் பேராசிரியராக இருந்தார்.
இராதாகிருஷ்ணன், சென்னைக்கு அருகே உள்ள தண்டையார்ப் பேட்டையில் பிறந்து, சென்னையில் கல்வி பயின்று, பின்னர் மைசூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். இவர் பிரான்சுவா-தொமினீக்கு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பேராசிரியர் இராதாகிருஷ்ணனின் தந்தையார் நோபல் பரிசு பெற்ற ச. வெ. இராமன். தந்தையாரின் புகழின் நிழலில் தான் இருக்கக்கூடாது என்பதைக் கடைசிவரை உறுதியாகப் பின்பற்றிய அறிஞர் இராதாகிருஷ்ணன்.

இவர் சுவீடிய வேந்திய அறிவியல் மன்றத்திலும், அமெரிக்க நாட்டு அறிவியல் மன்றத்திலும் (நேஷ்னல் சயின்ஸ் அக்காதெமியிலும்) வெளிநாட்டு உயரறிஞராகத் (Fellow) தேர்ந்தெடுக்கப்பட்டுருக்கின்றார்.
இவர் மிக இலேசான பறக்கும் கலங்களும், படகுகளும் கட்டுவதிலும் புகழ் ஈட்டி இருக்கின்றார்.
English Summary
Today is the birthday of space scientist V Rathakrishnan