இந்தியாவில் 36,77,000 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்.!
thirty six lakhs whatsapp accounts banned in india
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் உலகின் பிரபல நிறுவனமான வாட்ஸ் அப் ஒரு புகழ்பெற்ற மெசேஜிங் ஆப் ஆகும். இந்த நிறுவனம் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை என்று ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களை ஈர்க்கும் வகையிலும், சிரமத்தைக் குறைக்கும் வகையிலும் பல பல புதிய மாற்றங்களைக் கொண்டுவந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் 36,77,000 வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
அவற்றில், 13,89,000 வாட்ஸ் அப் கணக்குகளை எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கி உள்ளது. இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் 26.85 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கியது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
thirty six lakhs whatsapp accounts banned in india