சட்டம் இயற்றுவது என்பது சபைக்கு மட்டுமே அதிகாரம் உண்டு; முதல்வர் பேச்சு..!
The Chief Minister says that only the Assembly has the power to enact laws
சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கே சொந்தம் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கே சொந்தம். தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு தொடர்பாக கவர்னர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் அவையின் மாண்பைக் குறைக்ககூடிய வார்த்தை அடங்கிய பகுதிகளைத் தமிழக சட்டசபை நிராகரித்தது.'' என்று கூறியுள்ளார்.

அத்துடன், இன்று காலை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 'ஆளுநர் ரவி அரசு முறையை பின்பற்றாமல் தன் கருத்தை தெரிவித்து வருகிறார் என்றும், ஆளுநரின் செயல் அரசியல் சட்டத்திற்கு முரணானது என்றும், சட்ட முன்வடிவில் திருத்தங்களை கூற ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் பேசியிருந்தார்.
அத்துடன், சட்டம் இயற்றுவது என்பது சபைக்கு மட்டுமே அதிகாரம் என்றும், சித்த மருத்துவ முன்வடிவு நிதிச்சட்ட முன்வடிவு என்பதால் ஆளுநரின் பரிந்துரையை பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அரசமைப்பு நடைமுறைபடி செயல்படாத ஆளுநர் சட்ட முன்வடிவில் சில கருத்துகளை கூறியுள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
English Summary
The Chief Minister says that only the Assembly has the power to enact laws