மாநகராட்சிக் கூட்டத்தில் திடீரென வெளிநடப்பு செய்த மேயர் - காரணம் என்ன?
thajavur meyar ramanathan suddenly outside in meyar meeting
மாநகராட்சிக் கூட்டத்தில் திடீரென வெளிநடப்பு செய்த மேயர் - காரணம் என்ன?
இன்று தஞ்சை மாநகராட்சியில் மேயர் சண். ராமநாதன் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் முதலாவதாக ஆணையர் மகேஸ்வரி பேசும்போது, "நான் பெரியகுளம் நகராட்சி, தர்மபுரி நகராட்சிகளில் பணியாற்றும் போது விருதுகளை பெற்றுள்ளேன். அதேபோல், தஞ்சாவூர் மாநகராட்சியிலும் சிறப்பாக பணிபுரிந்து பல்வேறு விருதுகளை பெற கடுமையாக உழைப்பேன்" என்று தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மேயர் சண். ராமநாதன் பேசினார். அப்போது அவர், தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட் மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் வாடகை அதிகம் இருப்பதாக ஏலம் எடுத்தவர்கள் தெரிவித்திருந்தனர்.
அதனால், அவர்களின் வேண்டுகோளை ஏற்று கடைகளை மறு ஏலம் விட்டு குறைந்த வாடகைக்கு விடப்பட்டுள்ளது என்றார். இதைக்கேட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் மாமன்ற கூட்டத்தில் விவாதிக்காமல் எப்படி கடைகளுக்கு மறு ஏலம் விடலாம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத மேயர், மாநகராட்சியில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், முறைப்படி தான் ஏலம் நடந்ததாகவும், இத்துடன் கூட்டம் முடிவடைந்து விட்டதாகவும் கூறிவிட்டு வெளியேறினார்.
அப்போது, கவுன்சிலர்கள் பேசும் மைக் திடீரென அணைக்கப்பட்டது. இதற்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தஞ்சை மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் நடந்த இந்த அமளி சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
thajavur meyar ramanathan suddenly outside in meyar meeting