கடலூர் || பள்ளி மாணவியிடம் அத்து மீறிய இயற்பியல் ஆசிரியர் - போலீசார் அதிரடி.!
teacher arrested for harassment to student in cuddalore
கடலூர் || பள்ளி மாணவியிடம் அத்து மீறிய இயற்பியல் ஆசிரியர் - போலீசார் அதிரடி.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் கடந்த 12 ஆண்டுகளாக வெள்ளையத்தேவன் என்பவர் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 25-ம் தேதி ஓய்வு அறையில் இருந்த போது, ஓய்வு அறையில் குப்பை இருப்பதாகவும், அதை எடுக்குமாறும் 11-ம் வகுப்பு மாணவியை ஓய்வு அறைக்கு அழைத்துள்ளார்.

அதன் படி மாணவி, ஆசிரியர்களின் ஓய்வு அறைக்கு சென்று அங்கு கிடந்த குப்பைகளை எடுத்து போட்டுள்ளார். அந்த நேரத்தில், ஆசிரியர் வெள்ளையத்தேவன் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால், பயந்துபோன மாணவி அழுது கொண்டே அறையை விட்டு வெளியில் ஓடி வந்துள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு சென்ற மாணவி கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை சாப்பிடாமல் இருந்து விட்டு, திங்கள்கிழமை பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார். இது தொடர்பாக பெற்றோர் விசாரித்ததில், மாணவி பள்ளியில் நடந்ததை பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர், உடனடியாக காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். அந்தப் புகாரின் பேரில் பள்ளிக்கு வந்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் இயற்பியல் ஆசிரியர் வெள்ளையத்தேவனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில், ஆசிரியர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. அதன் பின்னர் போலீசார் வெள்ளையத்தேவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளிக்கூடத்தில் மாணவியிடம் ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
teacher arrested for harassment to student in cuddalore