'குடியுரிமை ஆவணமாக ஆதாரை ஏற்க முடியாது: தேர்தல் ஆணையகம் சொல்வதே சரி': உச்சநீதிமன்றம்..!
Supreme Court says Election Commission is right to say Aadhaar cannot be accepted as a citizenship document
இந்திய குடியுரிமைக்கான ஆவணமாக ஆதாரை ஏற்க முடியாது என தேர்தல்ஆணையகம் சொல்வது சரி எனவும் அதனை, ஆய்வு செய்ய வேண்டி உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கை நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மாலா பக்ஷி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. குறித்த வழக்கு விசாரணையின் போது, ' ஆதார் அட்டையை குடியுரிமைக்கான ஆவணமாக ஏற்க முடியாது' என தேர்தல் ஆணையகம் தெரிவித்து இருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதன் போது நீதிபதி சூரியகாந்த் கூறியதாவது: '' ஆதார் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய குடியுரிமை ஆவணம் என்று தேர்தல் ஆணையகம் கூறுவது சரியானது. அதனை ஆய்வுசெய்யப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், முதலில் இத்தகைய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையகத்துக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி உள்ளது. அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றால் அனைத்து பிரச்னைகளுக்கும் முடிவு வரும் என்றும், ஆனால், அவர்களுக்கு அதிகாரம் இருந்தால், பிரச்னை ஏதும் இருக்காது என்று குறிப்போபிட்டுள்ளார். மேலும், இந்தப் பணிகள் சட்ட விரோதம் என நிரூபிக்கப்பட்டால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பட்டியலை ரத்து செய்வோம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையின் போது மனுதாரர் சார்பில் ஆஜரான கபில் சிபல் கூறுகையில், தேர்தல் ஆணையகம் ஆதாரை ஏற்க மறுக்கிறது. நான் இந்தியன் என்று சொன்னால், அதனை நிரூபிக்க வேண்டிய வேண்டிய கூடுதல் சுமை எனக்கு ஏற்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நீதிபதி நீதிபதி சூரியகாந்த் கூறுகையில், இந்திய குடிமக்கள் என்று நிரூபிக்க ஏதேனும் ஆவணம் இருக்கும் என்றும், அனைவரும் சான்றிதழ் வைத்துள்ளனர். அது இருந்தால் தான் சிம் கார்டு வாங்க முடியும் என்று தெரிவித்துள்ள்ளார். இந்த வழக்கு நாளைக்கு தொடர்ந்து நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
English Summary
Supreme Court says Election Commission is right to say Aadhaar cannot be accepted as a citizenship document