கணவரின் நீண்ட ஆயுளுக்காக விரதம்: முட்டைக் குழம்பு சமைக்க மறுத்த மனைவி: கணவனின் விபரீத செயலால் கிராம மக்கள் அதிர்ச்சி..!
Husband commits suicide after wife refuses to cook egg chutney in Chhattisgarh
சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி மாவட்டம் சங்கரா கிராமத்தில் திகுரான் என்பவர் நேற்று மாலை முட்டைகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அவற்றை மனைவிடம் கொடுத்து, முட்டைக் குழம்பு தயார் செய்ய கூறியுள்ளார். ஆனால், நேற்று (திங்கட்கிழமை) கரு பாத் (Karu Bhaat) விழா. அடுத்த நாளான இன்று விரதம் கடைபிடிக்க இருக்கிறேன் என்று கணவரிடம் கூறி, இதனால், 'முட்டைக் குழம்பு சமைக்க முடியாது' எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் மனமுடைந்து போன கணவன் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலை தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன், தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன் நீண்ட ஆயுளுடன் செழிப்புடன் வாழ்வதற்காக சத்தீஸ்கர் மாநில பெண்கள் நர்ஜாலா விரதம் விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். அதற்கு முந்தைய நாள் பாகற்காய் சேர்த்து கசப்பாக சமைக்கப்படும் சாப்பாடு 'கரு பாத்' என்று அழைப்பப்படுகிறது.
தீஜ் விழாவுக்கு முந்தைய தினம் அவர்கள் இதை சாப்பிடுவார்கள். அதற்கு அடுத்த நாள் நர்ஜாலா விரதம் கடைபிடிப்பார்கள். இதனால் விரதம் கடைபிடிப்பதற்கு முந்தைய நாள் கடைசியாக 'கரு பாத்' சாப்பாடு சாப்பிடுவார்கள். இந்நிலையில், தன்னுடைய கணவன் நீண்ட ஆயுளுடன் இருக்க நர்ஜாலா விரதம் இருப்பதற்காக, மனைவி முட்டைக் குழம்பு சமைக்க மறுப்பு தெரிவித்த நிலையில், அந்த கணவனே தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Husband commits suicide after wife refuses to cook egg chutney in Chhattisgarh