'ராகுல் காந்தியை திறந்தவெளி சந்தையில் தூக்கிலிட வேண்டும்'; ரேவந்த் ரெட்டியின் விமர்சனத்திற்கு பிஆர்எஸ் பதிலடி..! - Seithipunal
Seithipunal


ஆற்று நீர் விவகாரத்தில் தெலுங்கானா மாநிலத்திற்கு அநீதி இழைத்ததாக பிஆர்எஸ் தலைவர் கே. சந்திரசேக ராவ் மற்றும் அவரது மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சித்திருந்தார். அத்துடன், அநீதி இழைத்த இருவரையும் தூக்கில் போட தகுதியானவர்கள் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் ராகுல் காந்தியைத்தான் தூக்கிலிட வேண்டும் என பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் ராம ராவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ராம ராவ் கூறியுள்ளதாவது:

"உண்மையில் யாரை தூக்கிலிட வேண்டும். ராகுல் காந்தி வாரங்கலுக்கு வந்தார். காங்கிரஸ் தலைவர்கள் விவசாயிகளை சந்தித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினர். Rythu Bandhu கீழ் கேசிஆர் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் 15 ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்றார்கள். அவர்கள் கொடுத்தார்களா?. அவர்கள் இரண்டு பயிர்களுக்கு கொடுக்கவில்லை. தற்போது அவர்கள் 15 ஆயிரத்திற்குப் பதிலாக 12 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைத்துப் பயிர்களுக்கும் ரூ.500 போனஸ் வழங்குவது, குத்தகை விவசாயிகளுக்கு ரைத்து பாண்டு திட்டத்தை விரிவுபடுத்துவது மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட மற்ற வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுகிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்படியானால், யாரைத் தூக்கிலிட வேண்டும்..? ரேவந்த் ரெட்டியை அல்ல. அவரை நம் மீது திணித்த ராகுல் காந்தியைத்தான் தூக்கிலிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வாரங்கலில் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ராகுல் காந்தி 70 லட்சம் விவசாயிகளை ஏமாற்றிவிட்டார் என்றும், அவரை ஒரு திறந்தவெளி சந்தையில் தூக்கிலிட வேண்டும் என்று ராம ராவ் பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The BRS retaliates against Revanth Reddys criticism saying that Rahul Gandhi is the one who should be hanged


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->