ஈரானில் இந்தியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: ஈரான் தூதர் உறுதி..! - Seithipunal
Seithipunal


ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் அங்குள்ள மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பொதுமக்கள் மக்கள் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதால் வன்முறை வெடித்துள்ளது. இதில் 07 வரை உயிரிழந்துள்ளனர்.

அங்கு நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்கள் என கூறப்படுகிறது.

மேலும், ஒரு வாரத்துக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால்பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் மத்திய வெளிவிவகார அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ஈரானுக்கு தேவையற்ற பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்திய குடிமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இந்நிலையில், இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் இந்தியர்களின் நலன்களின் பாதுகாப்புக்கு, ஈரான் அரசு என்ன வகையான உத்தரவாதம் வழங்க முடியும் என ஈரானிய தூதர் முகமது பதாலியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அப்போது, பதிலளித்த முகமது பதாலி, ஈரானில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும், இந்திய குடிமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Iranian ambassador has confirmed that there is no threat to Indians in Iran


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->