ஐ.பி.எல் 2026 அட்டவணை வெளியீடு; சென்னை அணிக்கான போட்டிகளின் முழு விவரம்..!
IPL 2026 schedule released and full details of the matches for the Chennai team
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை இந்தியாவின் மும்பை கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்தாண்டு தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம்உள்ளிட்ட 04 மாநிலம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இந்தாண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டத்து.
இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடரின் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் ஐதராபாத் அணி மோதுகிறது. 05 மாநில தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு மீதமுள்ள அட்டவணை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின் படி சென்னை அணி மார்ச் 30 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. அடுத்து ஏப்ரல் 03 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியையும், ஏப்ரல் 05 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பெங்களூரு அணியையும் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் டெல்லி அணியையும் எதிர்கொள்கிறது.
English Summary
IPL 2026 schedule released and full details of the matches for the Chennai team