திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு 04 தொகுதிகள் ஒதுக்கீடு..!
4 seats allotted to MDMK in DMK alliance
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தர்தலுக்கான உத்தியோகபூர்வ தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்ததேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் இன்னும் சில சிறிய கட்சிகளும் கூட்டணியில் உள்ளது.
இந்நிலையில், தி.மு.க. தனது கூட்டணி கட்சியான மதிமுக கட்சிக்கு 04 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 03 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் சின்னத்திலும் போட்டி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 06 இடங்களில் போட்டியிட்ட மதிமுக,04 இடங்களில் வெற்றி பெற்றது.
English Summary
4 seats allotted to MDMK in DMK alliance